இதழ் - 90 இதழ் - ௯0
நாள் : 14-01-2024 நாள் : ௧௪-0௧-௨௦௨௪
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் உருதுமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
மாஜி | முந்தியன |
பேமானி | மானமிலி |
மார்வாரி | வட்டியீட்டு |
முண்டா | தோள் |
மௌசு | கவர்ச்சி |
- இவர் எங்கள் பள்ளியின் மாஜி தலைமை ஆசிரியர் ஆவார்.
- இவர் எங்கள் பள்ளியின் முந்தைய (மேனாள்) தலைமை ஆசிரியர் ஆவார்.
- எத்தனை முறை கூறினாலும் பேமானி போல் உள்ளான்.
- எத்தனை முறை கூறினாலும் மானமிலி போல் உள்ளான்.
- தொழில்களிலே மார்வாரித் தொழிலும் ஒன்று ஆகும்.
- தொழில்களிலே வட்டியீட்டுத் தொழிலும் ஒன்று ஆகும்.
- ஆண்களுக்கு அழகு முண்டா வலிமையே.
- ஆண்களுக்கு அழகு தோள் வலிமையே.
- தற்போது ஆண்களிடையே மௌசாகி வருவது அழகு சாதனப்பொருட்களே.
- தற்போது ஆண்களிடையே கவர்ச்சிகரமானதாக வருவது அழகு சாதனப்பொருட்களே.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete