பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 89                                                                                                        இதழ் - 
நாள் : 07-01-2024                                                                                         நாள் : 0-0-௨௦௨
  
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழில் வழங்கப்படும்

உருதுமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


பாட்சாவல்லமையான அரசன்
பீடிஇலைச்சுருட்டு
புதினாஈயெச்சக்கீரை
போதைவெறி மயக்கம்
பேக்குமடையன்
 
  
  • பாட்சாவிடம் சூழ்ச்சி தோற்றுப் போனது.
  • வல்லமையான அரசனிடம் சூழ்ச்சி தோற்றுப் போனது.

  • பீடி குடிப்பது உடல் நலத்திற்கு கேடானது.
  • இலைச்சுருட்டு குடிப்பது உடல் நலத்திற்கு கேடானது.

  • புதினாக்கீரையை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.
  • ஈயெச்சக்கீரையை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

  • மனிதனை மிருகமாக்கக் கூடியது போதையாகும்.
  • மனிதனை மிருகமாக்கக்கூடியது வெறி மயக்கமாகும்.

  • பேக்கா நீ?
  • மடையனா நீ?

 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: