இதழ் - 140 இதழ் - ௧௪௦
நாள் : 29 - 12 - 2024 நாள் : ௨௯ - ௧௨ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 140
“ உறற்பால தீண்டா விடுதல் அரிது ”
விளக்கம்
ஒருவன் ஒரு பொருளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்பொருள் அவனுக்கு வந்தே தீரும். அதாவது “வருவது வந்தே தீரும்” என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் 'உறற்பால
தீண்டா விடுதல் அரிது'.
இங்கு கழுமலம் என்பது சீர்காழி என்ற ஊரைக் குறிக்கும்.
கழுமலத்தில் கட்டப்பட்டிருந்த யானை கருவூரில் உள்ள கரிகால் பெருவளத்தானிடம் சென்றது. மேலும், அவனை சோழ நாட்டிற்கு அரசனாகவும் ஆக்கியது என்பது வரலாறு.
சிறந்த பொருள் எதுவாயினும் தம்மை விரும்பியவரிடத்துத் தானாகவே வந்துசேரும் என்பதும் அதன் முன்வினைப்பயன் தாமாகவே உற்றவரிடம் சேர்த்துவிடும் என்பதையே 'உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
அருமை
ReplyDelete