இதழ் - 91 இதழ் - ௯௧
நாள் : 21-01-2024 நாள் : ௨௧-0௧-௨௦௨௪
வேளிர்
பண்டுதொட்டுப் பழந்தமிழகத்தில் வேளிர் என்னும் பெயருடைய ஒரு சமூகத்தினர் முன்னாளில் சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அக்குலத்தாரில் ஒரு வகையார் இருக்குவேளிர் எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள கொடும்பாளூர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளூரில் பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிப்பிடுகின்றது. இன்னும் சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இவ்வூர் பெயர்கள் இருக்கு வேளிரொடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete