பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 63                                                                                          இதழ் -
நாள் : 09-07-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
   
 
பழமொழி – 63 

” பகையாளி குடியை உறவாடிக் கெடு “
 
விளக்கம்
    ஒருவன் தனக்குத் தீராப் பகையாளி ஆகிவிட்டான் என்றால் அவனுடன் எப்படியாவது உறவு (நட்பு) கொண்டு அவனது குடியைக் (குடும்பத்தை) கெடுக்க வேண்டும் என்று தவறாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்

” பகையாளி பகையை உறவாடிக் கெடு “

    இங்கு பகை என்ற சொல் மருவி குடி என்று வந்துள்ளது. ஒருவன் தனக்குத் தீராப் பகையாளி ஆகிவிட்டாலும் அப்பகை தீர அவனோடு எப்படியாவது நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவன் மீது கொண்ட பகை மறையும் என்பதையே “பகையாளி பகையை உறவாடிக் கெடு” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: