இதழ் - 89 இதழ் - ௮௯
நாள் : 07-01-2024 நாள் : 0௭-0௧-௨௦௨௪
ஆவியர்
ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக்குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஆவியர் ஒருவனாகிய பேகன் என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுங்கின்றது. அம்மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று.
முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் ஊர் ஆவியர் வாழ்ந்த ஊரேயாகும். திருஆவிநன்குடி என்பது தற்காலத்தில் பழனியின் பெயராக அழைக்கப்படுகின்றது.
(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில்)
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete