பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 67                                                                                           இதழ் -
நாள் : 06-08-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
   
 
பழமொழி – 67

” இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
 
தவறான விளக்கம்
    நம் கண்ணிற்கு மேல் உள்ள இமை செய்யும் குற்றம் நம் கண்ணிற்குத் தெரிவதில்லை என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.



” இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது  
 
உண்மை விளக்கம்
      நம் மனநிலை எப்போதும் நம் உடலினுள்ளே தான் இருக்கிறது. ஆனால் நம் உடல் செய்யும் குற்றம் நம் மனநிலைக்குத் தெரிவது இல்லை. அதுபோல நம் கண்ணிற்கு மேல் உள்ள இமை செய்யும் குற்றம் நம் கண்ணிற்குத் எவ்வாறு தெரிவதில்லையோ அதைப்போல, நாம் செய்யும் குற்றம் நம் மனசாட்சிக்குத் தெரிவதில்லை என்பதையே “இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது” என்றும், அக்குற்றத்தினை மற்றோர் கூறும் பொழுதுதான் நம் மனநிலை அதை உணர்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவே நம் முன்னோர்கள் இப்பழமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 
    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment:

  1. அருமை, சிறந்ததொரு பழமொழி

    ReplyDelete