பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 100                                                                                                  இதழ் - 00
நாள் : 23-03-2024                                                                                  நாள் : -0-௨௦௨


பழமொழி – 100

” ஈடில் லதற்கில்லை பாடு 
 
விளக்கம்

     சான்றோர்கள், தம் வலிமையாலும் செழுமையாலும் பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவார்கள். அவர்களின் புகழுக்கு இணையில்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
        கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
        பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
        'ஈடில் லதற்கில்லை பாடு'.
              
     பெரிய மாடங்களைக் கொண்ட வீடானது அழிந்த பின்னும் அதிலுள்ள மரங்கள் மீண்டும் கட்டுவதற்காகப் பயன்படும் தன்மையினை உடையது. அதுபோலவே, சான்றோர்கள் செல்வம் இல்லாத நிலையிலும், தம்முடைய பெருந்தன்மையாலும் ஈகை குணத்தாலும் நிறைந்திருப்பர். அதனால் அவர்களின் இணையில்லாச் சிறப்புடைய புகழுக்கு என்றும் அழிவில்லை என்பதையே 'ஈடில் லதற்கில்லை பாடு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

     மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

1 comment: