பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 119                                                                                              இதழ் - ௧௧
நாள் : 04- 08 - 2024                                                                         நாள் : 0 - 0 - ௨௦௨௪



உவமைத்தொகை

     உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

சான்று
  • மலர்க்கை  - மலர் போன்ற கை
     உவமை         _    மலர் 
     உவமேயம்      _    கை
     உவம உருபு    _    போன்ற
     இதில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

சான்று
  • தேன்மொழி - தேன் போன்ற மொழி 
     தேன்      _    உவமை 
     மொழி    _   உவமேயம் 
     போன்ற   _    உவம உருபு 
     இதில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

     இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

1 comment: