இதழ் - 49 இதழ் - ௪௯
நாள் : 02-04-2023 நாள் : 0௨-0௪-௨௦௨௩மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை உருபு ஆல், ஆன், ஒடு, ஓடு போன்றவைகள் ஆகும். இது பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பொருளை உணர்த்தும்.
சான்று
- ஆல் - மண்ணால் குதிரை செய்தான்
- ஆன் - அறத்தான் வருவதே இன்பம்
- ஒடு - அறத்தொடு நிற்றல்
- ஓடு - நட்போடு பழகினான்
ஒரு பொருளைச் செய்ய உதவும் பொருள் கருவிப்பொருள் எனப்படும். இது முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.
முதற்கருவி
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி எனப்படும்.
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி எனப்படும்.
சான்று
- மரத்தால் சிலை செய்தான்
துணைக்கருவி
ஒன்றைச் செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி.
ஒன்றைச் செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி.
சான்று
- உளியால் சிலை செய்தான்
கருத்தாப் பொருள்
ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும்.
ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும்.
ஏவுதல் கருத்தா
பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா எனப்படும்.
சான்று
பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா எனப்படும்.
சான்று
- கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
இயற்றுதல் கருத்தா
தானே செய்வது இயற்றுதல் கருத்தா ஆகும்.
சான்று
தானே செய்வது இயற்றுதல் கருத்தா ஆகும்.
சான்று
- திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்பட்டது
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
சான்று
- புறந்தூய்மை நீரான் அமையும்
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
சான்று
- தாயொடு குழந்தை சென்றது
- அமைச்சரோடு மக்களும் வந்தனர்
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
மிகச் சிறப்பு.
ReplyDelete