இதழ் - 122 இதழ் - ௧௨௨
நாள் : 25- 08 - 2024 நாள் : ௨௫ - ௦௮ - ௨௦௨௪
தொகாநிலைத் தொடர்
- ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
சான்று
- காற்று வீசியது
- விளக்கம் : இத்தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது " என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறு சொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.
- குயில் கூவியது
- விளக்கம் : இத்தொடரில் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
அதே போன்று, இத்தொகைநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.
அவையாவன,
- எழுவாய்த் தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத்தொடர்
- வினையெச்சத்தொடர்
- வேற்றுமை தொகாநிலைத்தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல்தொடர்
- அடுக்குத்தொடர்
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete